தொடர்புடைய செய்திகள்
- முட்டைகோஸில் உள்ள வைட்டமின்களும் அதன் அற்புத பலன்களும் !!
- வெந்தயத்தை பயன்படுத்தி என்னவெல்லாம் மருத்துவ நன்மைகளை பெறலாம்...!!
- பீட்ரூட் ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் முகப்பொலிவு கூடுமா...?
- தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு முக்கிய காரணங்களும் தீர்வுகளும் !!
- பற்களை பாதுகாத்துக்கொள்ள உதவும் சில எளிய மருத்துவ குறிப்புகள் என்ன...?
எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்களை கொண்டுள்ள மங்குஸ்தான் பழம் !!
மங்குஸ்தான் பழத்தில் எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மங்குஸ்தான் பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.
உடல் கொழுப்பை அல்லது உடல் இடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மங்குஸ்தான் பழம் ஒரு சிறந்த வரபிரசாதம். மங்குஸ்தான் பழத்தைத் தினமும் ஒரு முறை என மூன்று வாரங்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைக்க முடியும்.
மங்குஸ்தான் பழத்தில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகள் அறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள பெக்டின் எனப்படும் நார்ச் சத்துப் பொருள் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளைக் கரைத்து கொலஸ்டிரால் அளவை சமப்படுத்துகிறது.
மங்குஸ்தான் பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி சத்து அடங்கியுள்ளது. இது புளூ காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் காக்கும்.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. பருவ காலங்களில் மங்குஸ்தான் பழங்களை வாங்கி சாப்பிடுவது மிகவும் நல்லது.
அடுத்த கட்டுரையில்
