1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அம்மை நோயை எளிதில் விரட்ட.....!

அம்மை ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் பரவக் கூடியது. அதோடு எரிச்சல் மிகுந்தது. சிவந்துபோய் வலியை உண்டாக்கும். உடல் சூடு, குருமித் தொற்றல் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவும்.
தும்மல், இருமல் மூலமாக காற்றின் மூலம் இந்தக் கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவும். அம்மைக் கொப்புளங்கள் வெடிப்பதாலும்  நோய்த்தொற்று பரவும்.
 
கொப்புளங்களை சொறிவதால், அதிலுள்ள தண்ணீர் மற்ற இடத்தில் பட்டு, அங்கும் கொப்புளங்கள் வரக்கூடும், அதனால் பாதிப்படைந்த இடங்களில் சொறியவே கூடாது. குழந்தைகளாக இருந்தால் கைகளில் காட்டன் கிளவுஸ் போட்டு விடுங்கள். தளர்வான மெல்லிய காட்டன் உடைகளை மட்டும் தான் அம்மை நோயிற்கு ஆளானவர்கள் பயன்படுத்த வேண்டும். குளிந்த நீரில் காட்டன் துணியை நனைத்து, எரிச்சலாகும் இடத்தில் ஒத்தடம் கொடுப்பதும், குளிர்ந்த நீரில் குளிப்பதும்  மிகவும் உகந்தது. முக்கியமாக அவர்கள் கைகளால் சொறிவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
 
தினமும் வெறும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் போர்வை, விரிப்பு ஆகியவற்றை மைல்ட் டிடெர்ஜெண்ட் கொண்டு நன்றாக துவைக்க வேண்டும்.
குளிக்கும் நீரில் சிறிது மஞ்சளும் வேப்பிலையும் சேர்த்துக் கொள்ளலாம். 1 கிளாஸ் தண்ணீரில் சிறிது இஞ்சியைப் போட்டு, கொதிக்க வைத்து தேன் கலந்து  குடிக்கலாம். இந்த சமயத்தில் காரமான மற்றும் எண்ணெய் உணவுகளை சாப்பிடவே கூடாது. 
 
இளநீர், மோர், லெமன் ஜீஸ், தர்பூசணி, கிர்ணி, நுங்கு என குளிர்ச்சியான நீராகார உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறி சூப்களை ஆறவைத்தும் குடிக்கலாம். இவற்றைப் பின்பற்றினாலே அம்மை நோயை எளிதில் குணப்படுத்தலாம்.