செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெந்தயத்தை தேநீர் செய்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்...!!

வெந்தய விதையை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலையில் தடவிவர முடி நீளமாகவும் கருமையாகவும் வளரும். முடி உதிர்வதும்  குறையும்.
மாதவிலக்கு ஒழுங்கற்று காண்பது, மாதவிலக்கு ஒழுங்கற்று காண்பதுஇ மாதவிலக்கின் போது வயிற்றுவலி, இடுப்பு வலி ஏற்ப்படுவது போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து சக்கரை கலந்து சாப்பிடலாம்.
 
வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தின்றபின்பு பாலோ, தயிரோ குடிக்க வயிற்றுவலி, வயிற்றுச் சூடு நீங்கும்.
 
தினமும் 25கி. வெந்தயத்தை உட்கொள்ள இரத்தத்தில் கூடிய சக்கரையின் அளவு குறையும். நீரிழிவு நோயாளியின், குளுக்கோஸ், குருதிக்கொழுப்பு ட்ரைகிளிசரைட் அளவுகளையும் அது குறைக்கும்.
வெந்தய தேநீர் வாய் நாற்றத்தைப் போக்கும். வாய் மற்றும் நாசிப் பாதையில் சளி தங்குவதால் கெட்ட நாற்றம் ஏற்ப்படும் இதே பிரச்சனை சிறுநீர்ப் பாதை, இரைப்பை குடல் பாதை, இரத்த ஓட்டம், பிறப்புறுப்பு ஆகியவற்றிலும் ஏற்ப்படக்கூடும். வெந்தய தேநீரை தொடர்ந்து சாப்பிட்டு  வர தீர்வு கிடைக்கும். நீரிழிவுக்கான சிகிச்சையிலும் வெந்தயத்தைப் பயன்படுத்தலாம்.
 
தொண்டைப் புண்ணுக்கு வெந்தய நீரைக் கொப்பளிக்க சரியாகும். வெந்தய தேநீரில் சில சொட்டுக்கள் எலுமிச்சம் சாறு சேர்த்துக்கொள்ள  மணம் கிடைக்கும்.
 
காய்சலில் அவதிப்படுபவருக்கு வெந்தய விதையை அரைத்து பொடி செய்து தேநீர் தயாரித்து குடிக்கச் செய்தால் காய்ச்சல் தணியும்.