செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த தாமரை; எப்படி...?

தாமரையின் கிழங்கும், விதையும் மிகுந்த ஊட்டச்சத்து மிக்கவை. கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ்  ஆகியவையும் உள்ளன.
* தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு சூடான நீரில் கலந்து குடித்துவர ரத்த அழுத்தம் சீராகும்.
 
* தாமரை இதழ்களுடன் அதிமதுரம், நெல்லிக்காய், மருதாணி இலைகளைச் சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி வடித்து எடுத்து தலைக்கு தேய்த்துவர இளநரை மாறும். முடி உதிர்வதும் குறையும்.
 
* தாமரை இதழ்களை நீரில் வெல்லத்துடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடல் சூடு தனியும். சிறுநீரகத் தொற்றுகள் நீங்கும்.  நினைவாற்றல் கூடும். சருமம் பளபளக்கும்.
 
* தாமரை பூவின் மகரந்தத்தை தேனில் குழைத்து உண்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். வயிற்று புண் ஆறும்.
 
* தாமரைத் தண்டை வெயிலில் உலர்த்தி நார் தயாரித்து அதனை கொண்டு விளக்கேற்றப் பயன்படுத்தலாம்.
 
* தாமரையின் விதைகள் கரிய நிறத்தில் கடினமானதாக இருக்கும். இதனை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை சாப்பிட்டால் இவை உங்கள்  இதயத்துக்கு வலிமை சேர்க்கும்.
 
* வெண்தாமரை ஷர்பத் தயாரித்து சாப்பிட இரத்தமூலம், சீத பேதி, ஈரல் நோய்கள், இருமல் கட்டுப்பட, மூளைக்கு பலம் தருவதற்கு  பயன்படுகிறது.
 
* கர்ப்பிணிகளுக்கு பசி எடுக்க வெண்தாமரைப் பூவை அரைத்து எலுமிச்சை அளவு சாப்பிட வேண்டும். கண்பார்வை தெளிவு பெற தேனுடன் மகரந்தபொடியை கலந்து சாப்பிட வேண்டும்.