வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (17:44 IST)

முலாம் பழத்தினை சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் !!

முலாம்பழத்தில் உள்ள அதிகப்படியான நார் சத்து மலக்குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலையும் போக்குகிறது.


முலாம்பழம், வயிற்றுக்கு நல்ல குளிர்ச்சி தரக்கூடியது. வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தை சமநிலைப்படுத்தி,  உணவை எளிதில் ஜீரணமாக உதவி செய்கிறது. இதன் மூலமாக வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், வயிறு உப்புசம் போன்ற செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

இரவு உணவு சாப்பிடும்  முன்பு முலாம்பழத்தினை சாப்பிட்டு வர செரிமானம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும்  மிக விரைவில் குணமாகும்.

முலாம் பழத்தை தொடர்ந்து உணவுகளோடு சேர்த்து சாப்பிட்டு வர மலக்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் வரும் வாய்ப்பு குறைகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த தேவையான விட்டமின் சி அதிகம் நிறைந்தது முலாம்பழம். உயர் இரத்த அழுத்தத்தினால் அவதி படுபவர்களுக்கு முலாம்பழம் மிகவும் நல்லது.

முலாம்பழம், சிறுநீரக கற்களை கரைப்பது  மட்டுமில்லாமல், முலாம் பழத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான நீர்ச்சத்து சிறுநீரைப் பெருக்கி கற்கள் எளிதில் வெளியேறவும்  உதவி செய்யும்.