1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Let us know which herbs are beneficial for any disease!

எந்த மூலிகைகள் எந்த நோய்களுக்கு பயன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்!

மூலிகை
சிறு உடல் பாதிப்புகளுக்கு மருத்துவரைத்தான் தேடிப் போகவேண்டும் என்று அவசியமில்லை. ஒவ்வொரு மூலிகையும் ஒரு  அற்புத மருந்தாகும். நம் கண் முன்னே பல மூலிகைகள் இருந்தாலும் அதன் பயன் மற்றும் நன்மைகளை தெரிந்து கொள்ள முற்படுவதில்லை. இயற்கையில் கிடைக்க கூடிய பொருட்களின் பயன்களை பற்றி அறிந்துகொள்வோம்.

 
செம்பருத்திப்பூ: அனைத்து வகையான இதய நோய்க்கும் சிறந்தது. செம்பருத்திப்பூ சாப்பிட்டால், தங்க பஸ்பம் சாப்பிடுவதை  போல. ஏனென்றால் செம்பருத்திப் பூவில் தங்கச்சத்து இருக்கிறது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம்  பிரச்னைகளுக்கு, செம்பருத்திப்பூ கஷாயம் நல்ல மருந்து.
 
கிராம்பு: சமையல் உப்புடன் சிறிது கிராம்பை சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.  தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
 
பாகற்காய்: குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். கல்லீரலை பாதுகாக்கும். தினந்தோறும்  பாகற்காய் சாறு அருந்தினால் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம்.
 
மணத்தக்காளி: குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். கபம் கரையும். ஆஸ்த்துமா, நீரிழிவு, காசம் முதலிய நோய்  உடையவர்கள், மெலிந்த உடலினை உடையவர்கள் அனைவருக்கும் இது சிறந்தது.
 
கடுக்காய்: கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல்  புண் ஆகியன ஆறும். தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர நோயில்லா நீடித்த வாழ்க்கையைப்  பெறலாம்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
பச்சை பயறு குழம்பு செய்ய.....