1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (16:05 IST)

தண்ணீரை இயற்கையான முறையில் சுத்தப்படுத்தும் முறைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது.


வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித்துணியால் ஒரு தண்ணீரை பில்டர் செய்தால்,வடி கட்டினால் அந்தத் தண்ணீரில் உள்ள அனைத்து நோயை உண்டு செய்யும் வைரஸ்,பக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது.

வாழைப்பழத் தோலை மண் பானைக்குள் இருக்கும் தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு வெளியே எடுத்து விட்டால் இந்த வாழைபழத் தோல் பானையில் உள்ள நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும், கெட்ட பொருள்களையும் உறிஞ்சி எடுத்துவிடுகிறது. ஆனால் வாழைபழத் தோலை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக மாறி விடும்.

செம்பு என்ற உலோக பாத்திரத்தின் மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான சக்தி கிடைக்கிறது. செம்பு பாத்திரங்களை தண்ணீர் வைக்க பயன்படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும்.