வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (18:18 IST)

உடல் நலத்திற்கு வழிவகுக்கும் சிட்ரஸ் பழங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

citrus fruits
சிட்ரஸ் பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலில் படிந்துள்ள கொழுப்புகளை கரைத்து அதை ஆற்றலாக மாற்றக்கூடிய காரின் என்னும் பொருளை வைட்டமின் சி சுரக்கின்றது சிட்ரஸ் பழங்களில் தான் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகின்றது.


சிட்ரஸ் பழங்களை உண்பதால் என்னும் பொருள் உருவாகி உடலில் சேரும் கெட்ட கொழுப்பினை ஆற்றலாக மாற்ற முடியும் மேலும் மன அழுத்தத்தினால் சுரக்கப்படும் கார்டிசால் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. வயிற்றுப் பகுதியில் தேவையில்லாத கொழுப்பு அதிகரிப்பதற்கான காரணம் இந்த கார்டிசால் தான் எனவே வைட்டமின் சி அதிகமாக உள்ள காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்

பேரிக்காய் ஆப்பிள் போன்ற அதிக சத்துக்களைக் கொண்ட பழம்தான் இந்த பேரிக்காய் பேரிக்காயில் நமது நாட்டில் ஆப்பிள் என்று கூட சொல்வார்கள் பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாகவும் குறைந்த அளவு கலோரிகளும் இருக்கின்றன எனவே இந்த பழம் கிடைக்கும் காலங்களில் தவறாமல் வாங்கி சாப்பிட்டு வர வேண்டும். அதுவும் உணவு உண்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு இந்த பேரிக்காயை சாப்பிட்டால் உணவில் உள்ள கொழுப்புகள் உடலில் தங்குவதை தவிர்த்து உடல் எடையில் மாற்றத்தைக் காண முடியும் நார்ச்சத்துக்கள் சேர்த்து கேட்சின்ஸ் மற்றும் வீடுகள் எனப்படும் இரு வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன இவற்றின் மூலம் பேரிக்காய் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு வயிற்றில் சேர விடாமல் தடுக்கின்றது

கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற சத்துக்கள் நல்ல அளவில் இருக்கின்றன ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த கேரட்டை தினமும் ஒன்று வீதம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு குடல்புண் போன்றவைகள் வராமல் தடுக்கப்படும்

அன்னாசி பழத்தில் பொட்டாசியம் கால்சியம் மாங்கனீஸ் மற்றும் கனிமங்கள் போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன அன்னாசிப்பழம் இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கின்றது இந்த பழத்தில் நார்ச்சத்து மிகுதியாக கொழுப்புச் சத்து மிகக் குறைந்த அளவிலும் இருக்கின்றது எனவே உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி அன்னாசிபழம் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது

ஆப்பிள் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று இயற்கை உரத்தைப் பயன்படுத்தி ஆப்பிளை தோலுடன் சேர்த்து சாப்பிடும்போது அதிக நன்மையை கொடுக்கும் ஆப்பிளின் தோலில் தான் உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் இருக்கின்றன தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியமான உடல் நலத்திற்கு வழிவகுக்கும்.