புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தேங்காய் எண்ணெய்யில் உள்ள மருத்துவ பயன்களை அறிந்து கொள்வோம்....

இளநரைக்கு தேங்காய் எண்ணெய்யுடன் வெந்தயம், சீரகம், வால் மிளகு ஆகியவற்றை பொடி செய்து கலந்து தேய்த்து வர இளநரை மறையும்.
கரிசலாங்கண்ணி சாற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி தலைக்கு தேய்த்து வர இளநரை வருவதை தடுக்கும் தலைமுடி கருமை நிறமாகும். உடல்  வலிக்கு குப்பை மேனி இலைச்சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி தேய்த்து வர குணமாகும்.
 
தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்து வந்தால் முடி நன்றாக செழித்து வளரும். தேங்காய் என்ணெய்யுடன் மருதாணி, செம்பருத்தி, சோற்றுக்கற்றாழை,  கரிசலாங்கண்ணி சேர்த்து காய்ச்சி பயன்படுத்தி வந்தால் தலைமுடி நன்கு செழித்து வளரும், முடி கொட்டுவதும் நிற்கும்.
 
தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் பூஞ்சை எதிர்ப்பி குணங்கள் உள்ளதால் அது பொடுகை தடுக்கும். இது தலை முடி வளர்ச்சியை  ஊக்குவித்து, சுற்றுச்சூழல் அழுத்தம் மற்றும் மாசில் இருந்து தலைமுடியை பாதுகாக்கும். வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யை கொண்டு  தலைச்சருமத்திலும், முடி வேரிலும் மசாஜ் செய்தால், தலை முடியை சிறந்த முறையில் ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும் அரிப்பு போன்றவைகள் நீங்கும்.  தலைச்சருமத்திற்கு ஊட்டமளித்து முடி உதிர்தலையும் தடுக்கும்.
 
தேங்காய் எண்ணெய் மூளை சிறப்பாகச் செயல்பட உதவும். அல்சைமர் போன்ற ஞாபகமறதி பிரச்னைகளைத் தடுக்கும். தைராய்டு பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்கும். 
 
தோலில் ஏற்பட்டுள்ள தழும்புகள் மறைய, தேங்காய் எண்ணெய் துணைபுரிகிறது. கை, கால் மூட்டுகளில் பலருக்கும் கறுப்பு நிறத்தில் அடர்ந்தத் திட்டுகள் இருக்கும். இவர்கள், தொடர்ந்து தேங்காய் எண்ணெயை அந்தப் பகுதியில் பயன்படுத்திவந்தால், பிரச்னை சரியாகும்.