1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (09:36 IST)

பல்வேறு நோய்களை போக்கும் கோரை கிழங்கு !!

கோரை கிழங்கு கசப்புத் தன்மையுடையது. ஆனால் நறுமணமாக இருக்கும். கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். விதை மூலமும் உற்பத்தியாகும். இந்த கோரை கிழங்கில் பல விதமான மருத்துவ குணங்கள் உள்ளன.


முகச்சுருக்கம் நீங்க கோரை கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, சந்தன பொடியுடன் பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசி சுமார் 10 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர முகச்சுருக்கம் சரியாகும்.

பல்வேறு நன்மைகளை கொண்ட கோரைக்கிழங்கு தோல்நோய்களை குணப்படுத்துகிறது. தோலுக்கு மென்மை, பொலிவு கொடுக்கிறது. மேலும் முகப்பரு வராமல் தடுக்கும். மருக்கள் விலகிபோகும். வியர்வை நாற்றத்தை போக்குகிறது.

கோரை கிழங்கு 5 கிராம் வரை எடுத்து இதனுடன் கால் ஸ்பூன் சுக்குப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர காய்ச்சல் தணியும்.

கோரை கிழங்கு பல்வேறு நோய்களை போக்கும் நல்மருந்தாக விளங்குகிறது. கோரை கிழங்குடன் ஊறவைத்த வெந்தயம், சோம்பு, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடித்துவர சிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர் எரிச்சலோடு வெளிவருதல், சிறுநீரோடு ரத்தம் வெளியேறுதல் உள்ளிட்ட பிரச்னைகளை கோரை கிழங்கு சரி செய்கிறது.