இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உண்ணவேண்டிய உணவுகள் !!
மனித உடலில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை இயல்பை விட குறைவாக இருக்கும்போது இரத்த சோகை ஏற்படுகிறது. இரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் உள்ளது, இது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது.
இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, நம் அன்றாட உணவில் பீட்ரூட்டை சேர்க்க வேண்டும். இதை பொரியல் அல்லது ஜூஸ் செய்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம்.
பேரீச்சம் பழம் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த ஒரு உணவாகும், இது இரும்பு சத்தை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவுகிறது. இரவில் 2-3 பேரீச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து காலையில் உண்ணலாம்.
அத்திப்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது, 4-5 அத்திப்பழங்களை, தினமும் இரவில் தண்ணீரில் ஊறவைத்து, தினமும் காலையில் அவற்றை சாப்பிடலாம், அல்லது தேனில் ஊறவைத்த உலர் அத்திபழத்தை தினமும் சாப்பிடலாம்.
தினமும் மாதுளம் பழத்தை சாப்பிடலாம். உலர்ந்த பழங்களில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், இரத்தத்தில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதற்கும் தினமும் உணவில் அக்ரூட் பருப்புகள், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு மற்றும் உலர் திராட்சை போன்ற உலர்ந்த பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
வாழைப்பழத்தில் இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளது. இது ஹீமோகுளோபின் மற்றும் என்சைம்களின் உற்பத்தியைத் தூண்டி இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி 12 ஆகியவை இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.