வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அனைத்து சுவாச நோய்களின் சிகிச்சைக்கு பயன்படும் கண்டங்கத்திரி...!!

கண்டங்கத்திரியின் வேர், இலை, பூ, காய், பழம் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இந்தச் செடியானது பார்வைக்கு கத்தரி செடியைப் போல கொத்தாக  வளர்ந்திருக்கும்.  


இலைகளின், காம்புகளில் முட்கள் நிறைந்து இருக்கும். இதன் பூ நீலவண்ணமாகவும், காய் பச்சை நிறத்துடனும் காணப்படும்.
 
கண்டங்கத்திரி முக்கியமாக இருமல், சளி மற்றும் குளிரினால் வரும் காய்ச்சல் போன்ற அனைத்து சுவாச நோய்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. கண்டங்கத்திரியின் இலைகள் நச்சுத் தனமையை நீக்கி கல்லீரல் பாதிப்படைவதை தடுக்கிறது.
 
கண்டங்கத்திரியினால் சுவாச நோய், சுவாசக்காசம்(டிபி), அக்கினிமந்தம், தீரா சுரம், தொண்டையில் ஏற்படும் புண், முகவாதம், நீரேற்றம், பீனிசம், பல் வலி  போன்றவை தீரும்.
 
கண்டங்கத்திரியில் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு அதிகமாக உள்ளது. அதனால் விரும்பத் தகாத பக்க விளைவுகளை திறம்பட குறைக்கிறது என்று  நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக கண்டங்கத்திரி இலை மற்றும் பழச்சாறு இரண்டும் பயன்படுத்தப்படுகிறது.
 
கண்டங்கத்திரியின் வேர் இருமலுக்கு ஒரு நல்ல தீர்வைக் கொடுக்கிறது. கண்டங்கத்திரியின் வேரை கஷாயம் வைத்து குடித்தால் சளி மற்றும் காய்ச்சல்  அனைத்தும் குணமடையும். மேலும் கண்டங்கத்திரியை குழம்பு வைத்தால் அது மிகவும் சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இது வளரும்  குழந்தைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

கண்டங்கத்திரி இலையை நெருப்பில் வாட்டி இடித்து தூள் செய்து அரைத்தேன்கரண்டி காலை மாலை தேனில் குழப்பி சாப்பிட்டு வந்தால் இருமல், சளி, சுரம், சுவாசக்காசம், கபம்(சளி) எளிதில் கரையும்.
 
கண்டங்கத்திரி இலையை சாற்றுடன் நல்லெண்ணைய் கூட்டி காய்ச்சி வடித்து மேற்பூச்சாக பூசினால் தலைவலி, கீழ்வாதம், அக்குள்நாற்றம் போன்றவை தீரும்.  கண்டங்கத்திரி பூவை நல்லெண்ணெய்யுடன் காய்ச்சி வடித்து மூலத்திற்கு பூசி வர மூலம் தீரும். கால் வெடிப்புகளில் பூசி வர விரைவில் குணமாகும்.
 
கண்டங்கத்திரி வேர், ஆடாதோடா வேர், திப்பிலி, ஓமம், சிற்றரத்தை ஆகியவையை அரைத்தேக்கரண்டி அல்லது 5 கிராம் அளவு  சுண்டக்காய்ச்சி காலை, மாலை 200 மிலி தண்ணீரில் அருந்திவந்தால் கபம், சுரம், சுவாச நோய்கள் நீங்கும்.