திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெண்டைக்காய் ஊறவைத்த நீர் தரும் அற்புத பலன்கள்...!!

இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில்  அந்நீரைப் பருக வேண்டும்.  இப்படி தினமும் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை பெறலாம்.

வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.
 
வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று மலச்சிக்கல்  ஏற்படுவது  தடுக்கப்படும்.
 
வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள்  வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல  ஆய்வுகள் கூறுகிறது.
 
வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இந்த நீரை தொடர்ந்து பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு  கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.
 
நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்  கொள்ளவும் உதவும்.