செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 14 மே 2022 (15:37 IST)

வயிற்றில் இருக்கும் நச்சுக்களை நீக்கி வயிற்றை சுத்தமாக்கும் கடுக்காய் பொடி !!

Kadukkai
நமது நாட்டின் பண்டைய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்றவற்றில் பயன்படுத்தபட்டு வந்திருக்கிறது. “கடுக்காய்” அப்படிபட்ட மூலிகைகளில் சிறப்பானதாகும்.


இந்த கடுக்காயில் அக்காயின் மேற்புற தோல் ஓடுகள் மட்டுமே மருத்துவ குணம் கொண்டவை. அதன் விதைகள் சிறிது நச்சு தன்மை வாய்ந்தவை எனவே அவற்றை பயன்படுத்தக்கூடாது.

தினமும் இரவு சாப்பிட்டு முடித்ததும் கடுக்காயின் ஓடுகளை பொடியாக்கி அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டு, ஒரு கோப்பை நீர் அருந்தி வர உடல் வலிமை பெரும். மிகுந்த ஆற்றல் உடலில் உண்டாகும்.

கடுக்காய் தோலை சிறிதளவு எடுத்து அதனுடன் இஞ்சி,மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நெய்யில் வதக்கி சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி மேம்படும். வயிற்றில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி வயிறு சுத்தமாகும்.

கடுக்காய் தூளை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அதே அளவு சுக்கு, திப்பிலி தூள்களை கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாத,பித்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்.

கடுக்காய், கொட்டை பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் நன்கு பொடியாக்கி, அந்த பொடியை கொண்டு பற்களை துலக்கி வந்தால் பற்கள், ஈறுகள் சம்பந்தமான அணைத்து பிரச்சனைகளும் நீங்கும்.