1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Kadukkai gives good relief for stomach problems !!

வயிற்று பிரச்சினைகளுக்கு நல்ல நிவாரணம் தரும் கடுக்காய் !!

நோய்கள்
திரிபலா சூரணத்தை 48 நாட்கள் தொடர்ந்து பால் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழலாம் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

கடுக்காயில் மலத்தை இளக்கும் பண்புகள் உள்ளன. இரவு தூங்குவதற்கு முன்பு கடுகாய் பொடியை ஒரு டம்ளர் சூடான நீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பல வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். கடுக்காய் பசியைத் தூண்டும். செரிமானதை அதிகரிக்கும்.
 
10 கிராம் கடுக்காய் பொடியை எடுத்து, அதே அளவு சுக்கு, திப்பிலி இரண்டு தூள்களையும் கலந்து காலை, மாலை சாப்பிட்டால் வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
 
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். ஒரு டீஸ்பூன் கடுக்காய் பொடியை சூடான நீரில் கலந்து. தாங்கக்கூடிய வெப்பநிலைக்கு வந்ததும், குடிக்க வேண்டும். தொண்டை புண் குணமாகும். மேலும் ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க கடுக்காய் உதவுகிறது. 
 
கடுக்காய் சருமத்தை சுத்தப்படுத்தும். இது உடலின் நச்சுகளை அகற்றும் என்பதால், கடுக்காய்பொடியை உட்கொள்வதால் உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தும். உங்கள் உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும் என்பதால் இதை எடுத்துக்கொள்வதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
சில மூலிகை செடி வேர்களின் மருத்துவ பலன்கள் !!