திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இயற்கையான முறையில் சருமத்தினை பராமரிக்க சில எளிய குறிப்புகள் !!

அருகம்புல்லை சுத்தமாகக் கழுவி நன்றாக மென்று பல்வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்துக் கொண்டால் பல்வலி குறையும்.


சாதாரண வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் நீர் மோரில் உப்பு, கறிவேப்பிலை கலந்து, திரியும் வரை சுடவைத்து இரண்டு மூன்று முறை அருந்தினால் குணமாகும்.
 
வயிற்றில் இரைச்சல் இருந்தால், கொதிக்கும் நீரில் கொஞ்சம் ஓமம் போட்டு மூடி வையுங்கள். சிறிது நேரம் கழித்து வடிகட்டி பாலையும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிடுங்கள். வயிற்று இரைச்சல் நின்றுவிடும்.
 
முகப்பரு வருவது இயற்கை, அதனால் ஏற்படும் தழும்புகளும் இயற்கை. அது என்னதான் மேக்-அப் போட்டாலும் போகாத தழும்புகள் என்பது ஏறக்குறைய மருத்துவ உண்மை! ஆனால் சில இயற்கை வழிமுறைகள் உள்ளன.
 
வெந்தயம்முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல நீவி தடவவேண்டும். அல்லது வெந்தய விதைகளை நன்றாக கொதிக்கவிட்டு, பிறகு அரைத்து கூலான இடத்தில் வைக்கவும். இதனை தழும்புகள் மீது தடவி 15 அல்லது 20 நிமிடம் உலர விடவும். பிறகு ஜில் தண்ணீரில் முகத்தை கழுவவும்.
 
எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும், பஞ்சை அதில் நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கவும் சிறந்த மருந்தாகும்.
 
சந்தனம் மற்றும் பன்னீரைக் கலந்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளலாம். ஒரு மணிநேரம் கழித்து பிறகு அலம்பவும். ஆலிவ் எண்ணெய்யை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவக்கத்தை தடுத்து விடும்.