வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பலாப்பழத்தில் இத்தனை சத்துக்கள் நிறைந்துள்ளதா....?

பலாப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸால் நிரம்பியுள்ளது. செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிகல்களை எதிர்த்துப் போராடுவதில் இவை முக்கியமானவையாக உள்ளது.

பலாப்பழம் சாப்பிடுவதால் ரத்தம் கட்டுபாட்டில் இருக்கும். இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் சீராக இருக்கும். எலும்பு வளர்ச்சிக்கு தேவையான மெக்னீசியம் சத்து பலாப்பழத்தில் உள்ளது.
 
பலாப்பழத்தில் காப்பர் சத்து உள்ளதால் தைராய்டு சுரப்பி நன்றாக வேலை செய்ய உதவுவதால் தைராய்டு நோய் ஏற்படுவதை தடுக்கிறது. பலாப்பழம் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். 
 
பலாப்பழம் சாப்பிட்டு வந்தால், உடல் எடையும் அதிகம் குறையும் என்று கூறுவார்கள். காலை, மதியம், இரவு ஆகிய 3 வேலைகளிலும் 2 பலாச்சுளைகள் சாப்பிடுவது உடல் உடையை குறைக்க உதவும்.
 
பலாப்பாழத்தை முறையுடன் சாப்பிட்டால் கெடுதல் இருக்காது. பலா பழத்தை சாப்பிட்ட உடன், சிறிது நெய் அல்லது கொஞ்சம் பாலை அருந்தினால் எந்த தொல்லைகளும் ஏற்படாது.
 
பலாப்பலத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன. ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன.