1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அஜீரண கோளாறை போக்க உதவும் சில இயற்கை மருத்துவ டிப்ஸ் !!

ஒன்றரை டம்ளர் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இஞ்சி, சீரகம், கருவேப்பிலை ஆகிய மூன்றையும் போட்டு கொதிக்கவைத்து பின் வடிகட்டி அந்த நீரை குடித்தால் அஜீரண கோளாறு பறந்து போகும்.

உணவு அருந்திய பின் வெற்றிலை சாறு 2 ஸ்பூன் குடித்தால் அஜீரணம் நீங்கும். இதனாலேயே நம் முன்னோர்கள் உணவருந்திய பின் வெற்றிலை போட்டுக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். 
 
சுக்கு, மிளகு, திப்பிலி, பெரும்காயம் ஆகிய நான்கையும் சம அளவில் எடுத்துக்கொண்டு பொரித்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் சிறிதளவு சாப்பிட்டு வர அஜீரணம் கோளாறு அகலும் அதோடு வாய்வு தொல்லையும் நீங்கும்.
 
ஜாதிக்காய், சுக்கு, சீரகம் ஆகிய மூன்றையும் தலா 100கிராம் எடுத்துக்கொண்டு அதை பொடி செய்து உணவருந்தும் முன்பு 2 கிராம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் கோளாறு நீங்கும். 
 
நெல்லிக்காய் சாறில் மூன்றில் ஒரு பங்கு தேன் கலந்து காலையில் வெறும் கயிற்றில் குடித்து வர அஜீரணம் நீங்கும். அதோடு குடலும் வலுவடையும்.