1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம் சில அழகு குறிப்புக்கள் !!

பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது. உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வொரு பா‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் கா‌ட்டு‌கிறது. 
 
உட‌ல்‌நிலை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சில த‌ற்கா‌லிக பா‌தி‌ப்புக‌ளினா‌ல், நக‌ங்க‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி‌யி‌ல் கூட மா‌ற்ற‌‌ங்களை ஏ‌ற்படு‌த்து‌ம். நக‌ங்களை சு‌த்தமாகவு‌ம், ச‌ரியான அள‌வி‌ல் வெ‌ட்டி ‌விடுவது‌ம் ஒ‌வ்வொருவரு‌ம் நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்காக செ‌ய்யு‌ம் செயலாகு‌ம்.
 
ஒருவரது உட‌லி‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்து‌க் குறைவாக இரு‌ப்‌பி‌ன், ந‌க‌ங்க‌ள் உடைவது அ‌ல்லது ப‌ட்டையாக ‌வி‌ரி‌ந்து வள‌ர்வத‌ன் மூல‌ம் அ‌றியலா‌ம். ‌சிலரு‌க்கு நக‌ங்க‌ளி‌ல் மேடு ப‌ள்ள‌ங்க‌ள் ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம். இதுவு‌ம் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க் குறைபா‌ட்டையே கா‌ட்டு‌கிறது.
 
நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் ந‌ம்‌மி‌‌ல் பலரு‌க்கு இரு‌க்கலா‌ம். எ‌ப்போதாவது மன‌க்கவலை‌ ஏ‌ற்படு‌ம் போது நக‌ம் கடி‌ப்பது ஒரு ‌சில‌ர். ஆனா‌ல் எ‌ப்போது‌ம் நக‌த்தை தேடி‌த் தேடி கடி‌ப்பது ‌சிலரு‌க்கு பழ‌க்கமாகவே இரு‌க்‌கிறது. மருதா‌ணி இலைகளை அரை‌த்து வை‌க்க‌ப்படு‌ம் மரு‌தா‌ணி ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ல்ல பயனை அ‌ளி‌க்‌கிறது.
 
சில‌ர் அடி‌க்கடி நக‌ப்பூ‌ச்சை பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு. மாத‌த்‌தி‌ல் ஓ‌ரிரு நா‌ட்களாவது நக‌ங்க‌ள் கா‌ற்றோ‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம். அ‌ப்போதுதா‌ன் அத‌ன் உ‌ண்மையான த‌ன்மையை நா‌ம் அ‌றிய முடியு‌ம். மேலு‌ம், நக‌ங்க‌ள் கா‌ய்‌ந்து வற‌ண்ட த‌‌ன்மையுட‌ன் இரு‌ந்தா‌ல் அத‌ற்காக ந‌ல்ல மா‌ய்‌ச்சுரைஸ‌ர் ‌க்‌ரீ‌ம்களை‌ப் பய‌ன்படு‌த்துவது ‌சிற‌ந்தது.
 
சிலரு‌க்கு நக‌ங்களே வளராம‌ல் கு‌ட்டையாகவே இரு‌க்கு‌ம். இதுபோ‌ன்றவ‌ர்க‌ள் கை ‌விர‌ல்களு‌க்கு மசா‌ஜ் அ‌ளி‌த்து வ‌ந்தா‌ல், ‌விரை‌‌வி‌ல் நக‌ங்க‌ளி‌ல் வள‌ர்‌ச்‌சி ஏ‌ற்படு‌ம். ‌அழகு ‌நிலைய‌ங்களு‌க்கு‌ச் செ‌ன்று பெடி‌க்யூ‌ர், மெ‌னி‌க்யூ‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். இதுவு‌ம் ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.