Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் உணர்வை அதிகரிக்கும் செய்யும் வெந்தயம்

Updated: செவ்வாய், 10 ஜூலை 2018 (17:20 IST)
 
இந்திய உணவு வகைகளில் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்று வெந்தயம். அதனால் தான், நமது முன்னோர்கள், நமது உணவுப் பொருட்களில் வெந்தயத்திற்கு  மிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். 
 
வெந்தயம், ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை தூண்ட உதவுகிறது. வெந்தயத்தில் உள்ள சபோனின் எனப்படும் பொருள், ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான  டெஸ்டோஸ்டிரனை தூண்டும் சக்தி கொண்டது.
 
வெந்தயத்திற்கு, செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக வெளிநாட்டு ஆய்வு முடிவுகளும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஆய்வுக்காக 25 வயது முதல்  55 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வு செய்தபோது, அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயம்  மற்றும் வெந்தயச் சாறு கொடுத்து, கண்காணிக்கப்பட்ட போது, ஆறு வார காலத்திற்குப் பின்பு, அவர்களது செக்ஸ் உணர்வுகள் பல மடங்கு அதிகரித்துள்ளது  தெரிய வந்துள்ளது. வெந்தயம் சாப்பிடாத சிலரை அதே போல் ஆய்வுக்குட்படுத்திய போது அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் குறைவாகவே இருந்துள்ளது.
 
செக்ஸ் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது வெந்தயம். எனவே, இனி பணம், காசு செலவு பண்ணி கண்ட கண்ட மருந்துக்களை வாங்கி  உயயோகப்படுத்தாமல், நமது உணவில் அடிக்கடி வெந்தயத்தை சேர்த்துக் கொண்டாலே நல்ல பலன் கிடைக்கும்.

எல்லாம் காட்டு

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

30 வயதுக்கு மேல் சாப்பிட வேண்டிய உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்