வெள்ளரிக்காயில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா...?

வெள்ளரிக்காயில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான பல வைட்டமின்கள் அடங்கியுள்ளது. இதனால் அதை சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆற்றல் திறனை ஊக்குவிக்கும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி இதில் உள்ளது.
வெப்பத்தை தணிக்க உபயோகிக்கப்படும் வெள்ளரிக்காய் வேறு பல விதங்களில் நமக்கு நன்மையை ஏற்படுத்துகின்றன. அவை அழகிலும் கூட பல விதத்தில் உதவி புரியும். வெள்ளரிக்காயில் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. மேலும் இது தண்ணீர் குடிக்காததை ஈடுசெய்யும். 
 
வெள்ளரிக்காய் உண்ணுவதால், உடலில் ஏற்பட்டுள்ள வெப்பத்திற்கு நிவாரணம் கிடைக்கும். அதிலும் சருமத்தில் வெள்ளரிக்காயை சருமத்தில் தடவினால், சூரிய கதிர்களில் இருந்து அது உங்களை காக்கும்
 
வெள்ளரிக்காயில் உள்ள நீர், உடலில் இருக்கும் கழிவை நீக்கும் ஒரு துடைப்பமாக விளங்குகிறது. அதனை சீரான முறையில் சாப்பிட்டால், சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்களை கரையச் செய்யும்.
 
வெள்ளரிக்காயில் அதிக அளவில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சிலிகான் உள்ளது. அதனால் தான் ஸ்பா மற்றும் அழகு சாதன  நிறுவனங்கள் பெரும்பாலும் வெள்ளரிக்காயை பயன்படுத்துகின்றனர்.
 
வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரியான உணவாக அமையும். ஆகவே இதனை சூப் அல்லது சாலட்களில் சேர்த்துக் கொள்ளலாம். 
இன்சுலின் சுரப்பதற்கு, கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன் ஒன்று வெள்ளரிக்காய் சாற்றில் உள்ளது. அதனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவுகிறது. உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவுவதால், அவை  சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
 
வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதனால் தான்  உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் என இரண்டிற்குமே வெள்ளரிக்காய் உபயோகப்படுகிறது.
 
வெள்ளரிக்காயில் அதிக அளவில் சிலிகா உள்ளதால், தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு துணையாக நிற்கும். அதிலும் இதனை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து பருகும் போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதால் கீல்வாதத்திற்கும் நிவாரணம்  கிடைக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :