செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் பிஸ்தா பருப்பை சாப்பிட்டால் கொழுப்பை அதிகபடுத்துமா...?

நீரிழிவு நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவாகும். பிஸ்தா பருப்பில் வைட்டமின் பி6 ஊட்டச்சத்து அதிகளவு உள்ளது. மேலும் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால் அது ஹார்மோன்கள் செயல்பாட்டை சீர் செய்யும். சரும அழகை அதிகரிக்கச் செய்யும்.

பிஸ்தாவில் கொழுப்பு அதிகம் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. அதில் புரதமும் நார்ச் சத்தும் தான் மிகுந்துள்ளது. உடலினை உறுதி செய்யும் ஆன்டி ஆக்சிடென்டுகள் பிஸ்தா பருப்பில் நிறைந்துள்ளது. 
 
குழந்தை பெற்ற பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேக வைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும். ஆண், பெண்  இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட்டால் ஞாபகச் சக்தி அதிகரிக்கும்.
 
பிஸ்தாவில்  உள்ள வைட்டமின் பி6, காப்பர், மங்கனீஸ், பாஸ்பரஸ், தையாமின் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. பிஸ்தா பருப்பை நெய்விட்டு வறுத்து, ஒன்று  அல்லது இரண்டு தினமும் சாப்பிட செரிமான சக்தி அதிகப்படுவதுடன் சுறுசுறுப்பும் உண்டாகும்.
 
பிஸ்தாவை தினமும் சாப்பிட்டு வர, அது உடலை எப்போதும் துடிப்பாகவும் சுறு சுறுப்பாகவும் வைக்க உதவும். உடலின் மெட்ட பாலிசத்தைத் தக்க வைத்து, நோய்  எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். பிஸ்தா பருப்பில் வைட்டமின் ஏ மற்றும் ஈ மிகுந்தி ருப்பதால் உடல் அழற்சியை நீக்கும். 
 
பிஸ்தா பருப்பில் உள்ள சத்துகள், நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப் படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்கு கின்றன. 
 
பிஸ்தா எண்ணெயில் வைட்டன் ஈ அதிகம் இருப்பதால், அதைப் பயன்படுத்தும் போது சருமத்தின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படும். உலர்ந்த சருமத்திலிருந்து காத்து சருமம் எப்போதும் பளபளப்பாக புது பொலிவுடன் இருக்கச் செய்யும்.