செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இத்தனை நன்மைகள் தரும் கொய்யா இலையை எவ்வாறு பயன்படுத்துவது...?

கொய்யா இலைகளில் பல பயோஆக்டிவ் கலவைகள் உள்ளன. அவை உங்கள் உடலில் கார்போஹைட்ரேட்டுகள் உறிஞ்சுபடுவதை தடுக்கும்.

கொய்யா இலைகளில் இருக்கும் பினோலிக் கலவை, இரத்த-சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
 
கொய்யா இலைகளின் பயன்பாடு உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இதில் உள்ள கூறுகள் அதிக அளவு ஹைப்பர் கிளைசீமியாவைக் குறைக்க உதவுகின்றன, இது கொழுப்பைத் தடுக்க உதவுகிறது. 
 
கொய்யா இலைகளின் காபி தண்ணீரில் குர்செடின் உள்ளது. அதாவது இந்த டெங்கு காய்ச்சலின் போது எம்ஆர்என்ஏ என்ற நொதி உருவாவதைத் தடுக்கிறது. 
 
கொய்யா இலைகளில் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் பண்புகளும் உள்ளன. ஒரு ஆராய்ச்சியின் படி, கொய்யா இலையின் சாறு வயிற்றுப்போக்குக்கு நன்மை  பயக்கும் என நிரூபிக்கபட்டுள்ளது.
 
கொய்யா இலைகளின் உதவியுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தலாம். மேலும், கொய்யா இலைகள் கருவுறுதலை அதிகரிக்கும் திறன் கொண்டதாக கருதப்படுகிறது.
 
சருமத்தில் பருக்கள் மற்றும் கருப்பு புள்ளிகளை போக்க கொய்யா இலைகளை பயன்படுத்தலாம். இதில் வைட்டமின்-சி உள்ளது, இது உங்கள் முகத்தின் புள்ளிகளை  நீக்குகிறது.