1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தோல் சம்பந்தமான நோய்களை குணமாக்கும் தக்காளி !!

அன்றாடச் சமையலிலில் இடம் பெறும் தவிர்க்க முடியாத ஒரு பழம் தக்காளி. தக்காளியில் இரு வகைகள் உண்டு. ஒன்று நாட்டுத் தக்காளி. மற்றொன்று  'ஹைப்ரிட்' வகை.

தக்காளி ஜூசை வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தக்காளி சூப் செய்து பருகினால் சோர்வும், களைப்பும்  நீங்கி விடும்.
 
ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவை வராமல் தடுக்கிறது. பசியைத் துண்டும்  ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க  உதவுகிறது.
 
சிகரெட் மற்றும் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை தக்காளி குறைக்கிறது. அதோடு நுரையிரல் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. தக்காளியில்  உள்ள குளோரின், பொட்டாசியம், ஃபைபர் மற்றும் விட்டமின் C, இதயம் ஒரே சீராக செயல்படுவதற்கு உதவுகிறது.
 
ஜீரண சக்தியைத் அதிகரிக்கும். சொறி, சிரங்கு, போன்ற தோல் நோய்களைப் நீக்கும். தொற்று நோய்களைத் தவிர்க்கும். வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
 
தக்காளியில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள், நமது உடலின் இன்சுலின் அளவையும், கொழுப்பின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
 
தக்காளியில் உள்ள லைக்கொபின் மற்றும் மக்னீசியம் எலும்புகளின் உறுதியை அதிகமாக்கி, தைராய்டு சுரப்பியை சீராக்குகிறது. தக்காளியில் உள்ள அதிகப்படியான  ஆன்ட்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் விட்டமின் C யானது மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.