1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 14 மே 2022 (16:39 IST)

அழகு பராமரிப்பில் கொய்யா இலைகள் எவ்வாறு உதவுகிறது...?

Guava leaf tea 1
கொய்யா இலைகளிலும் பழத்தில் உள்ளது போலவே பொட்டாசியம் மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்திருப்பதால் அவை உங்கள் சருமத்திற்கு ஒரு சூப்பர்ஃபுட் ஆகும்.


எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு இருக்கும் பெரிய தொல்லை எண்ணெய் பிசுபிசுப்புதான். அதை அகற்ற கொய்யா இலைகள், எலுமிச்சை சாறு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து என தடவி 30 நிமிடங்கள் காய்ந்ததும் கழுவி விடுங்கள். எண்ணெய் பிசுக்கு போய்விடும்.

சருமம் அரிப்பு, நமிச்சலாக இருப்பின் கொய்யா இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறியதும் அதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். பின் அதை தேவைப்படும்போது ஸ்பிரே செய்து துடைத்துக்கொள்ளுங்கள்.

கொய்யா இலையில் விட்டமின் பி மற்றும் சி நிறைவாக உள்ளது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொலாஜின் செயல்பாட்டை தூண்டுகிறது. ஆக்ஸிஜனேற்ற பண்புகள் , அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

கூந்தலை பராமரிக்கவும், அதன் நிறத்தை மேம்படுத்தவும் கொய்யா இலைகள் சிறந்து விளங்குகின்றன.

கொய்யா இலைகளை நன்கு அலசி, நன்கு 20 நிமிடங்கள் கொதிக்க வேண்டும். நன்கு கொதித்து ஆறியதும் அந்த நீரை வேர்களில் படும்படி தடவி மசாஜ் செய்யவேண்டும். இதனால் தலையின் வேர்கள் தூண்டப்பட்டு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். அதோடு முடியும் நிறம் மாறும்.