நரம்பு தளர்ச்சியை சீராக்க உதவும் தேநீர்.. அறிவோம் ஆரோக்கியம்
நரம்பு தளர்ச்சியை சீராக்க, ரசாயன மருந்துகளை உட்கொள்ளாமல், எளிமையான நமது தமிழ் மரபு வழி மருத்துவத்திலேயே அதற்கான தீர்வு உண்டு என கூறப்படுகிறது.
இன்றுள்ள முதியவர்கள் மட்டுமல்லாது, இளைஞர்கள் முதற்கொண்டு நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்படுகின்றனர். இதை சீராக்க நமது தமிழ் மரபு வழி மருத்துவத்திலேயே தீர்வு உள்ளது என பல மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. நமது அருகாமையிலுள்ள கடைகளில் எளிதாக கிடைக்கும் கருங்காலிப்பட்டை, மருதம்பட்டை, சுக்கு, ஏலக்காய் ஆகியவையே இந்த தேநீருக்கு போதுமானது.
கருங்காலிப்பட்டை கால் கிலோவும், மருதம்பட்டை கால் கிலோவும், சுக்கு 50 கிராம் மற்றும் ஏலக்காய் 50 கிராமும் எடுத்துகொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து தூளாக்கி கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீரில், கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதனை வடிகட்டி தேவைப்பட்டால் சக்கரை சேர்த்து தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குறைபாடு தீரும் என கூறப்படுகிறது. மேலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால் ரத்த அழுத்தம், இதய நோய்கள், தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், உடல் பலவீனம் ஆகிய குறைபாடுகள் குறையும் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.