செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சுளுக்கை நீக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள் !!

கல் உப்பு தசை வலி மற்றும் தசைப் பிடிப்பைக் குறைக்க உதவுகிறது. கல் உப்பில் அதிக அளவில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால், இது வீக்கத்தை நீக்குகிறது. 


வெதுவெதுபான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குளிப்பதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
 
ஆமணக்கு எண்ணெய் எலும்புகளில் உண்டாகும் வீக்கம், சுளுக்கு மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. ஆமணக்கு எண்ணெயை சுத்தமான துணியில் ஊற்றி  சுளுக்கினால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். பின்னர் சூடான நீரில் துணியை நனைத்து சுளுக்கு உள்ள பகுதியில் ஒத்தடம் கொடுப்பதும் நன்மை அளிக்கும். 
 
ஆப்பிள் வினிகரில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன, இவை வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை நீக்குகிறது. வெதுவெதுபான தண்ணீரில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் வினிகரை சேர்த்து, பாதிக்கப்பட்ட பகுதியில் அந்ந நீரைப் பயன்படுத்தி ஒத்தனம்  அளிப்பதன் மூலம் வீக்கத்தைக் குறைக்க இயலும். 
 
ஆலிவ் எண்ணெயில் வீக்கத்தைக் குறைக்கும். பாதிக்கப்பட்ட பகுதியில் ஆலிவ் எண்ணெய் இட்டு லேசாக மசாஜ் செய்வதன் மூலம் உடனடி நிவாரணம்  கிடைக்கிறது. மேலும், ஆலிவ் எண்ணெய் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. 
 
பெரும்பாலும் கிராம்பு எண்ணெய்யை பற்கள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கவே பயன்படுத்துகின்றனர். எனினும், இதனை சுளுக்கிலிருந்து விடுபடவும்  பயன்படுத்தலாம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிதளவு கிராம்பு எண்ணெயை தடவி மசாஜ் செய்வது வலியைக் குறைக்க உதவுகிறது.