செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலில் உள்ள நீர்த்தன்மையை சமப்படுத்தி பராமரிக்க உதவும் இந்துப்பு !!

இந்தியாவின் மலை பகுதிகளில் இருந்தும் இந்த உப்பு பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இதுதான் ஹிமாலயன் உப்பு எனப்படும்.

உப்பை உடலில் சேர்க்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். உப்பில் இருக்கும் சோடியம் மனித உயிருக்கு அவசியமானது. உடலில் உள்ள நீர்ச்சத்தை சரியாக பராமரிக்க உப்பென்பது அவசியமாகிறது. 
 
எந்த வித ரசாயன கலவைகளை இல்லாமல் இயற்கையான சத்துக்களுடன் இந்துப்பு நமக்கு கிடைக்கிறது. மனிதர்களுக்கு அவசியமான 80 தாது உப்புக்கள் இந்துப்பில் நமக்கு கிடைக்கிறது. ஆகவே இந்த இந்துப்புவை நாம் சமையலில் பயன்படுத்துவதன் மூலம் இழந்த கனிம சத்துக்களை நாம் சுலபமாக பெற முடியும். நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.    
 
இயற்கையான தாது உப்புக்கள் ஏராளமான எண்ணிக்கையில் உள்ள இந்துப்புவில் 85 சதவிகிதம் சோடியம் மற்றும் 15 சதவிகிதம் கனிமங்கள் நிறைந்தவை.
 
சாதாரண உப்பு பதப்படுத்தப்பட்டு அயோடின் சேர்க்கப்படும் அதில் உள்ள எல்லா சத்துக்களும் அழிந்து சோடியம் மட்டுமே மிஞ்சுகிறது. ஆனால் இந்துப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு சோடியம் உடன் கனிமங்களும் கிடைக்கின்றன. 
 
உடலில் உள்ள நீர்த்தன்மையை சமப்படுத்தி பராமரிக்க இந்துப்பு மிக உதவி செய்கிறது. இதனால் நீர்சத்து குறைபாடு நீங்குகிறது. இதற்கு அளவான சோடியம் கொண்ட இந்துப்பு அவசியம்.
 
ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்ற உப்பு இந்துப்பு. இது ரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை சமன் செய்து விடுகிறது. மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்து கொள்வது சிறப்பான பலனை தரும்.