செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நல்லெண்ணெய்யில் உள்ள எண்ணற்ற நன்மைகளை பார்ப்போம் !!

நல்லெண்ணெயில் வைட்டமின், ஈ, வைட்டமின் பி6, மக்னீசியம், காப்பர், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருவதால் தான் என்னவோ, நம் முன்னோர்கள் இதனை நல்லெண்ணெய் என்று அழைக்கின்றனர் போலும்.

நல்லெண்ணெய்யை எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம். மலச்சிக்கல் நல்லெண்ணெய்யை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
 
கெட்ட கொழுப்பைக் கரைக்கும் நல்லெண்ணெய்யில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
 
உடலுக்கு குளிர்ச்சி உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயை சிறிது குடித்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
 
இரத்த அழுத்தம் நல்லெண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். குறிப்பாக நல்லெண்ணெய் குடிப்பதால், இரத்த அழுத்த மருந்துகளை நாளடைவில் குறைத்துவிடலாம்.
 
மூட்டு வலிகள் மூட்டு வலிகளால் கஷ்டப்படுபவர்கள், நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ குணப்படுத்தலாம்.
 
பல் வலி மற்றும் ஈறு பிரச்சனைகள் நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெயைக் தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி, 10 நிமிடம் கொப்பளித்து, வர வேண்டும். இப்படி செய்து வந்தால், பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியம் மேம்படும்.