1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 12 மே 2022 (18:41 IST)

அதிக மருத்துவ குணங்களை கொண்ட செம்பருத்திப்பூ !!

Hibiscus flower
செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது.


தஙகச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். தினமும் 10 பூவினை மென்று தின்று பால் அருந்தினால் நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும்.

இரத்த சிவப்பணுக்களுக்கு இது பெரும் துணை புரிவதாகும். இம்மலர் தின்பதற்கு சற்று வழவழப்பாக இருக்கும்.

தினமும் ஐந்து செம்பருத்திப் பூக்களை 48 நாட்கள் ஓர் ஆண் தின்று வந்தால், இழந்த சக்தியையும் பலத்தையும் பெறுவான்.

பிள்ளைகள் இம்மலரை உண்டு வந்தால் ஞாபக சக்தி நினைவாற்றல், புத்திக்கூர்மை, மூளை பலம் ஏற்படும். சிறுவர்கள் சாப்பிடும்பொழுது இப்பூவிலுள்ள மகரந்தக் காம்பை நீக்கி விடவேண்டும். இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும்.