வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சிறந்த மருத்துவ பலன்கள் தரவல்ல சீமை அகத்தி..!

சீமை அகத்தி சிறந்த மருத்துவ பலன்களும் தரவல்ல செடியாக குறுமரமாகத் திகழ்கிறது, சீமை அகத்தி. இதன் இலை, மலர்கள், காய் மற்றும் மரப்பட்டைகள், உடல்நல பாதிப்பைத் தீர்க்கும் மூலிகை மருந்துகளில் பயன்படுகின்றன.
உடல் சருமத்தில் ஏற்படும், சொறி, சிரங்கு, தேமல் போன்ற சரும வியாதிகளையும், இரத்த அழுத்த பாதிப்புகளை சரிசெய்யவும், சுவாசக் கோளாறுகள், சிறுநீரக பாதிப்புகள், பெண்களின் இரத்த சோகை, மாதாந்திர பாதிப்புகள் இவற்றை சரிசெய்யும் தன்மை கொண்டது சீமை அகத்தி. மற்றும் பால்வினை பாதிப்புகளையும்  சரியாக்கும்.
 
சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு, சிலருக்கு, சிறுநீர் கழிக்க முயற்சித்தாலும், சிறுநீர் கழிக்க முடியாமல், வேதனையில் தவிப்பார்கள். இதற்கு, தீர்வுகாண, சீமை  அகத்தியின் மஞ்சளும் பழுப்பும் கலந்த வண்ண மலர்களை சேகரித்து, வெயிலில் உலர்த்தி, பின்னர் அந்த மலர்களை நீரில் இட்டு, நன்கு சுண்டக் காய்ச்சி, அந்த  நீரை தினமும் பருகி வர, சிறுநீர் கழிக்க முடியாமல் அடைப்பை ஏற்படுத்திய சிறுநீரக பாதிப்புகள் எல்லாம், விலகி, சிறுநீர் முழுமையாக வெளியேறும். சிறுநீர்ப்பையில் தேங்கிய நீர் முழுதும் வெளியேறி, உடலில் புத்துணர்ச்சி தோன்றும்.
 
விஷ பூச்சிகள் கடித்துவிட்டாலோ அல்லது அவற்றின் எச்சம் நம் மீது பட்டாலோ, உடலில் அரிப்பு உண்டாகி, அதை சொரிய, வீக்கமாகி, காயமாகி ஆறாத புண்ணாக மாறிவிடும். இதற்கு தீர்வாக, சீமை அகத்தியின் பசுமையான இலைகளை நன்கு அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து, உடலில் அரிப்பு,  ஆறாத புண் மற்றும் வண்டுகடி காயங்களின் மேல் தடவி வர, சில நாட்களில், விஷக்கடி பாதிப்புகள் விலகி, உடலில் ஏற்பட்ட காயங்கள் ஆறி விடும்.