1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (18:32 IST)

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டு படுத்தும் கொய்யா இலை !!

கொய்யா இலையை கஷாயம் போல செய்து தொடர்ந்து குடித்து வந்தால், அதிகப்படியான உதிரப்போக்கு மட்டுப்படும், அத்துடன்  தைராய்டு சுரப்பு சமநிலைக்கு திரும்பும்.

வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை குணப்படுத்தி சுவாச கோளாறு மூக்கு அழற்சி போன்றவற்றிற்கு கொய்யா இலை தேநீர் உதவுகிறது.
 
செரிமான பிரச்னைகளால் அவதி படுபவர்கள் கொய்யா இலையின் தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, செரிமானம் ஒழுங்காக நடை பெறுவதற்கு உதவுகிறது.
 
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் அடிக்கடி ஏற்படும் காய்ச்சல்கள் மற்றும் பிற நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கலாம். கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மெல்வதும் கூட நன்மை பயக்கும்.
 
கொய்யா இலையினை நிழலில் உலர்த்தி வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து தேநீர் போல பருகலாம், இதனால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.
 
உடல் எடையினை குறைக்க விரும்புவோர் கொய்யா இலை தேனீரை பருகலாம். இதில் இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
 
நீரழிவு நோயினால் அவதிபடுபவர்கள் கொய்யா இலையின் நீரை பருகும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டு படுத்திக்கிறது. பல விதமான தலை முடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.