உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் இஞ்சி பால் !!
தினமும் ஒரு டம்ளர் இஞ்சிப் பால் குடிங்க, நிச்சயம் வாய்வு தொல்லையில் இருந்து விடுபடலாம். பெண்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிப் பால் குடித்து வந்தால், சினைப்பையில் வரும் புற்றுநோய் கட்டிகளை நீக்கலாம்.
இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே நிச்சயம் தெரியும். அத்தகைய இஞ்சியைத் தட்டி பாலுடன் சேர்த்து குடித்தால், உடலில் வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வைக் காணலாம்.
குறிப்பாக இஞ்சிப் பால் குடித்தால், இரத்தக் குழாய்களில் தங்கி அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்கள் கரையும், வாய்வுத் தொல்லை நீங்கும். அதுமட்டுமின்றி, பலரும் குனிந்து தன் பாதத்தை பார்க்க முடியாத அளவிலான தொப்பையைக் குறைக்க முடியும்.
இஞ்சிப்பாலைக் குடித்தால், சிகரெட் பிடித்து நுரையீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, நுரையீரலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.
மழை காலத்தில் பலரும் சளியால் அவஸ்தைப்படுவார்கள். அத்தகைய தொல்லை மிகுந்த சளியில் இருந்து நிவாரணம் பெற இஞ்சிப் பால் குடியுங்கள்.
குண்டாக இருப்பவர்கள் இஞ்சிப் பால் குடிப்பது நல்லது. ஏனெனில் அதிக அளவிலான கொழுப்பு பதார்த்தத்தை உட்கொண்டு, இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து அடைப்பு ஏற்படுவதை தடுப்பதோடு, இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான முறையில் செல்ல இஞ்சிப் பால் வழிவகுக்கும்.
மலைப் போன்ற தொப்பையைக் கொண்டவர்கள், தினமும் இஞ்சிப் பால் அருந்தி வர, படிப்படியாக தொப்பையைக் குறைக்கலாம்.