திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

தலையில் உள்ள பொடுகை அடியோடு விரட்ட சிறந்த வழிகள்!!

தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து சிறிது நேரம் கழித்து விதமான நீரில் தலையை அலசினால் பொடுகு  மறைந்துவிடும்.
தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனை நீங்கும்.
 
வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு  தொல்லை நீங்கும்.
 
தயிர் முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.
 
தலைக்கு குளிக்கும்போது கடைசியாக குளிக்கும் தண்ணீரில் வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.
 
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
 
மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
 
வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.