புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலின் செரிமான மண்டலத்தை சீராக்கும் நெய் !!

நெய் அஜீரண கோளரைத் தடுக்கிறது. நெய்யில் கொழுப்புத் தன்மை குறைவாக உள்ளதால் இதை சமையலில் பொறிக்கவும் பயன்படுத்தலாம்.

நெய்யில் வைட்டமின் K, A, மற்றும் E உள்ளது. இது கண்கள் மற்றும் சருமத்தை பாதுகாப்பதுடன் இரத்ததையும் சுத்தப்படுத்தும். நெய் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. வலுவைத் தருவதுடன் உடலில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கின்றது.
 
நெய்யில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களைவெளியேற்றச் செய்யும். தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது,  இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
 
நெய் உடல் இடையைக் குறைக்க மிகவும் எளிதான மருந்து. ஒரு தேக்கரண்டி நெய் சாப்பிட்டால் உடலில் மலச்சிக்கலைத் தடுத்து எடையைக் குறைக்கும்.
 
உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது. கொலஸ்ட்ரால் பிரச்சனை  உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம்.
 
வெண்ணெய்யுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்துவிடும்.
 
நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும், செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில்  வைக்க உதவும்.
 
விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும். உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை, அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம்.
 
நெய்யானது உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.