எந்த நோய்களுக்கெல்லாம் பூண்டு மருந்தாக பயன்படுகிறது தெரியுமா....?

வெள்ளைப்பூண்டில் மரபு ரீதியாகவே நிறைய தாதுக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பொருட்கள் மற்றும் சத்துப் பொருள்கள் உள்ளன. பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.
கெட்ட கொழுப்பான 'கொலஸ்டிரால்' உற்பத்தியை தடுக்கும் ஆற்றல் 'ஆலிசின்' மூலக்கூறுகளுக்கு இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள்  தெரிவிக்கிறது. ஆலிசின் சிறந்த நோய் எதிர்ப்பொருளாகும்.
 
ரத்தத் தட்டுக்கள் உறைந்துவிடாமல் பாதுகாப்பதிலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் 'ஆலிசின்'உதவுவதாக தெரியவந்துள்ளது. ரத்தக்கட்டிகள் ஏற்படாமல் பாதுகாப்பதிலும், உருவான ரத்தக் கட்டிகளை நீக்குவதிலும் பங்கெடுக்கிறது. மேலும் இதய பாதிப்புகள்,  முடக்குவாதம், பி.வி.டி. போன்ற வியாதிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
 
இரப்பைப் புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற நோய்த் தொற்று நுண்கிருமிகளை ஒடுக்கும் ஆற்றலுடைய நோய் எதிர்ப்பொருட்கள் வெள்ளைப்  பூண்டில் உள்ளது. 
 
பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு  நல்லது.
 
வியர்வையை பெருக்கும், உடற்சக்தியை அதிகப்படுத்தும், தாய்பாலை விருத்தி செய்யும், சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும்.
 
ஜீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், ரத்த கொதிப்பை தணிக்கும், உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்
 
பொட்டாசியம், இரும்பு, கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், செலீனியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் உள்ளன. செலீனியம் இதயத்திற்கு ஆரோக்கியம் வழங்கும் தாதுவாகும். சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியில் இரும்புத் தாது பங்குபெறுகிறது.
 
பீட்டா கரோட்டின், ஸி-சான்தின் போன்ற நோய் எதிர்ப் பொருட்களும், 'வைட்டமின்-சி'போன்ற வைட்டமின்களும் உள்ளன. 'வைட்டமின்-சி,  நோய்த் தொற்றை தடுக்கும், தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீரேடிக்கல்களை விரட்டியடிக்கும் தன்மையும் கொண்டது.
 
மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும். மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்யும். நோய்க்கிருமிகளை  அழிக்கும் திறன் கொண்டது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். 
 
மூட்டு வலியைப் போக்கும். வாயுப்பிடிப்பை நீக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால்,  நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.


இதில் மேலும் படிக்கவும் :