வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடல் எடையை குறைப்பதில் கொள்ளுவின் பங்கு....!

கொள்ளுவில் அதிகளவு அயன் மற்ற பருப்புகளை விட அதிகமாக உள்ளது. இதனால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. இது கொஞ்சம் உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பது உண்மை.
கொள்ளு ஊற வைத்த தண்ணீரில் மிளகு, சீரகம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால்  கொள்ளுவை சூப் வைத்து கொடுத்தால், சளி காணாமல் போய்விடும். சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை  குறைக்கும்.
 
கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து (தண்ணீர்க்கு பதிலாக) அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து  பொடி செய்து  வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும்போது பயன்படுத்தலாம். நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு  பொடியை போட்டால் அருமையாக  இருக்கும். இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம், கொ‌ள்ளு துவைய‌ல், கொ‌ள்ளு குழ‌ம்பு  ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல்  எடை குறையு‌ம்.
புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி  பார்க்கவும் புரதம் மிக அவசியம். கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக்  கொடுக்கக் கூடியது.
 
வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக்  கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி  பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
 
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள். சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள். அப்படி ஒரு  அருமையான  மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு. 
 
கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால், ரசம் வைக்கும் போது சிறிது பயன்படுத்தலாம். சிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால்  எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஆண்மை  சக்தியைப் பெருக்கும்.
 
‘இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் அதிக சக்தி கொள்ளுவில்  உள்ளது. இதில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. இதனை ரசமாக வைத்து உண்பது மிகுந்த நன்மை என்று சித்த மருத்துவத்தில்  சொல்லப்படுகிறது.