1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

இயற்கையான முறையில் பாதவெடிப்பை சரிசெய்வதற்கான குறிப்புகள்...!

பாதவெடிப்பு அசௌகரியத்தை ஏற்படுத்தும். பாதவெடிப்பு நமது ஆரோக்கியம் சார்ந்த மற்றும் அக்கறை கொள்ளவேண்டிய விஷயம். என்ன  செய்தாலும் திரும்ப வருகிறதா? கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த குறிப்புகளை பயன்படுத்தி பாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்யலாம்.
தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன்  மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து பேஸ்ட் தயாரித்து தடவினால், பாதங்கள் வறட்சி நீங்கி ஈரப்பதத்துடன் இருக்கும்.  
 
கையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் சூடா நீரில் கால்களை 5  நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த பேஸ்ட்டை தடவவும். 15 நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து  கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.
 
நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை பாலுடன் கலந்து குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் தேய்த்து கழுவுங்கள். இவ்வாறு செய்வதால் புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.
 
உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கி வெயிலில் காய வைக்கவும். அதன்பிறகு இந்த உருளைக்கிழங்கு பொடியை தூளாக்கி நீரில் கலந்து  உங்கள் பாதங்களில் தடவினால் பாத வெடிப்பு நீங்கும்.
 
மசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வாருங்கள். வெடிப்பு மறைந்து பாதங்கள் மிளிரும். மேலும் கடுகு எண்ணெய் தொடர்ந்து கடுகு எண்ணெய்யை தேய்க்க, இவை பாதங்களை மென்மையாக்கும்.
 
வாழைப் பழத்தை மசித்து உங்கள் பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதங்கள் மிருதுவாகும். பாதத்தில் உண்டாகும் சுருக்கங்கள்  மறையும்.