1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகள்...!!

உடல் எடையையும், அழகைக் கெடுக்கும் தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை  கரைக்கும் உணவுகளை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.
ஓட்ஸில் நார்சத்து அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து சீராக வைக்கும்.
 
ஆப்பிள் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் தேவையான கனிமச்சத்துக்களுடன் பெக்டின் என்னும் பொருளும் உள்ளதால், இவை கொழுப்பு செல்களை உறிஞ்சி உடலில் இருந்து வெளியேற்றிவிடும்.
 
உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்து, கெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்கும்.
பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இவர்றை சாப்பிட்டால், அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை  கரைத்து கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவியாக இருக்கும்.
 
தினமும் தேனை சுடு நீரில் கலந்து, காலையில் குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும் 
 
பருப்புகளை கொண்டு செய்யப்படும் சூப் மற்றும் கிரேவி போன்றவற்றை சாப்பிடும்போது, இதில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கிறதோ என்று  பயந்து சாப்பிட தேவையில்லை.
 
சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்க உதவும்.