ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

எட்டு வடிவத்தில் நடை பயிற்சி செய்வதால் என்ன நன்மைகள்...?

8 வடிவில் நடை பயிற்சி செய்ய காலை நேரத்திலோ, அல்லது நேரம்  கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடிநீளம் வேண்டும்)  எட்டு போடுகிற வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள் நடை பயிற்சி செய்ய வேண்டும்.
முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள் வடக்கிலிருந்து தெற்காக நடக்கவேண்டும். இதை ஒரு நாளைக்கு இருமுறை செய்ய வேண்டும்.காலையும், மாலையும் வேளைகள் மிக வசதியாக இருக்கும்.
 
இதை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
 
* பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளிகரைந்து வெளியேறுவதை காணலாம்.
 
* இந்த பயிற்சியை இருவேளைசெய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள் சிவந்திருப்பதை காணலாம். அதாவது ரத்த ஓட்டத்தை  சமன்படுத்துகிறது என்று அர்த்தம்.
 
* நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரைவியாதி) குறைந்து முற்றிலும் குணமாகும்.
* குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் போன்றவை தீரும்.
 
* கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலைகண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
 
* கேட்கும் திறன் அதிகரிக்கும்.
 
* உடல் சக்தி பெருகும் - ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்.
 
* குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
 
* ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும்.
 
* பாத வலி, மூட்டுவலி மறையும்.
 
* சுவாசம் சீராகும் அதனால் உள் உறுப்புக்கள் பலம் பெரும்.
 
“8” வடிவில் நடை பயிற்சியின் வடிவம் “முடிவில்லாதது” மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சமநிலை படுத்துகிறது.