1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய பயன்கள்!!!

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!

 
பழங்கள் ஒரு முக்கியமான உணவு. சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம். பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட 'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. 
 
இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது. பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது. அதனால் தயவு செய்து பழங்களை வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முன் சாப்பிடுங்கள்.
 
உண்மையில் உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!! 
 
நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால், நடக்காமல் தடுக்கப்படும்.
 
பழச்சாறு சாறு அருந்துவதை விட, பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல், மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும். ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும். இவை உங்கள் உடல் உறுப்புக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும். 
 
ஒரு 3- நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த டயட்டின் முடிவு நீங்களே ஆச்சரியப் படும்படி, நீங்கள் மிகவும் அழகாய், வனப்புடன் தோற்றமளிப்பதாய் உங்கள் ஃபிரண்ட்ஸ் கூறும்போது உணர்வீர்கள்.
 
கிவி பழம்: 
 
இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம். இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம். ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.
 
ஆப்பிள்:
 
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மை. ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது. 
 
ஸ்ட்ராபெர்ரி:
 
இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால், இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.
 
ஆரஞ்சு:
 
ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும். கொழுப்பைக் குறைக்க உதவும். மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும். அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.
 
தர்பூசணி:
 
92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது. மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால், அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி, பொட்டாசியம் ஆகியவை. 
 
கொய்யா & பப்பாளி: 
 
இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை. கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.
 
உணவிற்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர் அல்லது பானங்கள் குடிப்பது = புற்று நோய்.
 
குறிப்பு: இந்த தகவலை பகிர்ந்தவருக்கு நன்றி.