வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்...!!

உடல் எடையை குறைக்க பலரும் பல் செயல்களைப் பின்பற்றி, உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த எளிய வகை மருத்துவம் மூலம் பயன்பெறலாம்.
ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும்  மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
 
சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை  தடுக்கும்.
 
சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக்  குறைக்க உதவும்.
 
சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும். தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.