12 கிலோ உடல் எடையை குறைத்து இளம் ஹீரோவாக மாறிய ஜெயராம்! - வைரல் புகைப்படம்!

Last Updated: திங்கள், 29 ஜூலை 2019 (11:38 IST)
மலையாள சினிமாவில் புகழ்பெற்று தமிழ் சினிமா ரசிகர்களிடம் பரீசியமானவர் நடிகர் ஜெயராம். பப்லியான தோற்றத்தில் வெகுளியான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்களை உருவாகிக்கொண்ட இருக்கு அவரது அடையாளமே  பப்லியான தோற்றம் தான்.


 
ஆனால் சமீபத்தில் 12  கிலோ உடல் எடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் இளம் ஹீரோவாக மாறியுள்ளார். காரணம், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படமொன்றில் நடிக்கிறாராம். த்ரிவிக்ரம் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயராம் ஜோடியாக, தபு நடிக்கிறார். 


 
தனது உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மான மாறியுள்ளதை கண்ட ரசிகர்கள் வியப்படைந்து விட்டதால் இதுபற்றி பேசியுள்ள ஜெயராம், "அல்லு அர்ஜூன் நடிக்கும் தெலுங்கு படத்துக்காக உடல் எடையை குறைக்கச் சொன்னார்கள். கடுமையாக உடற்பயிற்சி செய்து 2 மாதத்தில் 12 கிலோ குறைத்திருக்கிறேன். இது எனக்கு 2 வது தெலுங்கு படம். இதில் என் கேரக்டர் பற்றி சொல்ல மாட்டேன். ஆனால் எனக்கு ஜோடியாக தபு நடிக்கிறார் என்று கூறியுள்ளார் ஜெயராம். 


இதில் மேலும் படிக்கவும் :