செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் பானங்கள் !!

உயர் இரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்கள் உப்பு, கொழுப்பு உணவை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. உணவின் மூலமும் கட்டுப்படுத்தப்படும் போது பெருமளவு இதய நோய்களை குறைத்துவிடமுடியும்.

மாதுளம்பழச்சாறு தொடர்ந்து குடித்துவந்தவர்களை ஆய்வு செய்வதில் அவர்களது உயர் இரத்த அழுத்தம் கணிசமாக குறைந்திருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து ஒரு டம்ளர் மாதுளம்பழச்சாறு குடித்து வாருங்கள். பிறகு உயர் இரத்த அழுத்தம் கணிசமாக குறைந்திருப்பதை உணர்வீர்கள்.
 
நெல்லிக்காய் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவும். நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்த குழாய்களை விரிவுபடுத்த உதவுகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் தீவிரமாகாமல் தடுக்கப்படுகிறது. இவை இரத்த நாளங்களை மென்மையாக நெகிழ்வாக ஆக்குவதால் இரத்த அழுத்தம் மேலும் குறைகிறது.
 
நெல்லிக்காயை தோல் நீக்கி மிக்ஸியில் அடித்து உடன் புதினா, கொத்துமல்லி, சம அளவு தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும். அல்லது நெல்லி சாறுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து குடிக்க வேண்டும். தினமும் ஒரு டம்ளர் நெல்லிச்சாறு இரத்த அழுத்தத்தை நன்றாக கட்டுக்குள் கொண்டுவரும். இதேபோன்று எலுமிச்சைசாறு சம அளவு நெல்லிக்காய் சாறுடன் மிதமான வெந்நீரில் கலந்து குடித்தாலும் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
 
வெளியே முள் போன்று இருந்தாலும் உள்ளே இனிப்பும், புளிப்பும் நிறைந்த பழம். அன்னாசிப்பழத்தில் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால் இவை உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நன்மை பயக்க கூடியது. தினமும் ஒரு டம்ளர் அன்னாசிப்பழச்சாறு உங்கள் இதயத்தை பாதுகாக்கவும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
 
மாதுளம் பழம் இரத்தத்தை சுத்திகரிக்ககூடியது. உடலில் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தக்கூடியது. வளரும் பருவம் முதலே தினம் ஒரு டம்ளர் மாதுளை சாறு குடித்துவந்தால் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை வராமல் தவிர்க்க முடியும். இதில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை தீவிரமாக்காமல் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.