திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற பானங்கள் !!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சாதாரண உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக பழ வகைகள் மற்றும் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸ் வகைகளை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஸ்டிராபெர்ரி பழங்களில் அதிகளவில் பாலிபீனால் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளன. இவை புற்றுநோய் மற்றும் இதய நோய்களை கட்டுப்படுத்த  உதவுகின்றன. மேலும் பற்கள் பராமரிப்பிற்கும் உதவுவதாக ஆய்வில் கண்றியப்பட்டுள்ளது.
 
சிவப்பு முட்டைகோஸ் மற்றும் புளு பெர்ரி ஜூஸில், அந்தோசயனின்கள், ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இவை நினைவுத்திறனை மேம்படுத்த உதவுகிறது.
 
கீரைகள் மற்றும் ஆப்பிள் ஜூஸில் வைட்டமின் கே அதிகளவில் உள்ளது. இது எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. கீரை மற்றும் ஆப்பிள் இரண்டுமே குறைந்த அளவிலான கலோரிகளையும் அதிக ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கின்றன.
 
உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் பயிற்சி செய்வதற்கு முன் பீட்ரூட் ஜூஸை குடித்தால் உடலில் ரத்த ஓட்டம் மேலும் அதிகரிப்பதோடு தசைகள் உள்ளிட்டவைகளுக்கு ஆக்சிஜன் அதிகமாக சென்று ஸ்டாமினை வலுவாக்க உதவுகிறது.
 
வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்களின் ஜூஸை அதிகம் குடித்து வருவதால், அது நமது ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதோடு, ரத்த குழாய்களில் டிரைகிளிசரைடுகள் படிதலை குறைக்கிறது.
 
தக்காளி ஜூஸ் அடிக்கடி குடித்து வந்தால் உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் கிடைக்கும். ஆகவே இந்த ஜூஸ் அடிக்கடி குடித்து வந்தால் நல்ல பலன்  கிடைக்கும்.