திங்கள், 4 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் பிளாக் காபி குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுமா...?

உடல் எடையை குறைப்பதில் பிளாக் காபி பெரும்பங்கு வகிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்பை எரிக்கும் தன்மை பிளாக் காபிக்கு உண்டு. எனவே உடல் எடையை குறைக்க பிளாக் காபி நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

காபியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. காபி ஒரு எனர்ஜி பூஸ்டர் போல செயல்படும். புற்றுநோய், இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய்களை எதிர்த்து போராடுவதில் பிளாக் காபி வல்லமை கொண்டது. 
 
உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து பசியை அடக்குகிறது. பிளாக் காபி பெப்டைட் என்று சொல்லப்படும் பசி ஹார்மோனிற்கு எதிராக செயல்படுகிறது. 
 
பிளாக் காபியில் உள்ள கஃபைன் ஆற்றல் பூஸ்டராக செயல்படுகிறது. அதிகப்படியான கலோரிகளை எரித்து உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்து கொள்கிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
 
உடலில் நீரின் அளவு அதிகமாக இருந்தாலும் எடை அதிகரிக்கும். பிளாக் காபி குடிப்பது உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். இதனால் கெட்ட நீர்  வெளியேறி உடல் எடை குறையும். 
 
எடை இழப்பு செயல்முறையை விரைவாக செய்யத் தூண்டும் குளோரோஜெனிக் அமிலம் பிளாக் காபியில் உள்ளது. அது மட்டும் இல்லாமல் குளுக்கோஸ்  உற்பத்தியை குறைக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. எனவே தினமும் பிளாக் காபி குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும். 
 
அதிகப்படியான கலோரிகளை எரித்து உடல் எடையை எளிய முறையில் குறைக்க நிச்சயமாக நீங்கள் பிளாக் காபியை தேர்ந்தெடுக்கலாம். பிளாக் காபியில் கிரீம், சர்க்கரை போன்றவை சேர்க்கப்படாததால் உடல் எடையை குறைக்கும் செயல்முறையில் இது சிறந்து விளங்குகிறது. ஆனால் எக்காரணத்தை கொண்டும் இதனை  அதிக அளவில் மட்டும் குடிக்க வேண்டாம்.