திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள்

ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணலாம். ஆயில் புல்லிங் என்பது வேறொன்றும் இல்லை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை ஊற்றி 10-15 நிமிடம் கொப்பளிக்க  வேண்டும், அவ்வளவு தான்.
சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு, அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன் வெதுவெதுப்பான தண்ணீர் இரண்டு டம்ளர் அளவு குடிக்க வேண்டும். பிறகு ஆயில் புல்லிங் செய்வது நல்லது.
 
ஆயில் புல்லிங் செய்வதால் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழும் நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.
 
எண்ணெய் கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்தவித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. ஏதாவது நோய்க்கான மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை.
 
ஆயில் புல்லிங் செய்யும் போது, ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும், பயப்பட வேண்டாம். வயிற்றுப் போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில் நிவாரணம்  வேண்டுவோர், நாள் ஒன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதை செய்ய வேண்டுமென்பது விதி.
 
இதன் மூலம், மூட்டு வலி, முழங்கல் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள்,  மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத் தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற நோய்கள் குறைந்து விடுகிறது  என்கின்றனர்.
 
இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு நோயின் தன்மை சற்று அதிகரித்து, பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமன உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.