வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ஜோதிடத்தின் பலன்கள் சிலருக்கு பலிக்காது ஏன் தெரியுமா?

ஜோதிடத்தின் பலன்கள் சில நேரங்களில் தவறிவிடுவதும் உண்டு. அவ்வாறு பலன்கள் தவறிவிடும்போது ஜோதிடமே தவறு என்று கூறிவிடக் கூடாது. நமது பூமியின் சுற்றுவட்டப்பாதை இவற்றில் எங்காவது சிறு மாறுதல் நடக்கும்போது ஜோதிடப் பலன்கள் தவறி விடக்கூடும்.
கைரேகை சாஸ்திரத்தில் சந்திரமேட்டில் சக்கரம், சூலம், வேல் போன்ற அமைப்புகள் இருந்தால், அவர்களுக்கு கைரேகை பலன்கள் கூறமாட்டார்கள். காரணம்  இவர்களது படைப்பு கடவுளின் நேரடி கண்காணிப்பில் இருப்பதாக கருதப்படும்.

மேலும் சாலை ஓரத்தில் அழுக்குத் துணிகளுடன் உடல், வாடை பிடித்த  மனநிலை பாதித்த மனிதர்களையும், பிச்சை எடுத்தும் பிழைக்கும் அகோரிகள், விகாரமான உடல், முகம் கொண்ட மனிதர்களைப் பார்க்கும்போது இவர்களுக்கு ஜோதிடம் பலிக்குமா? என்று நினைப்போம். நிச்சயம் பலிக்காது. காரணம் அவர்களது படைப்பு அதற்காகவே இருக்கும்.
 
ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும், ஜோதிடம் பலிக்காது. மூலும் லக்னத்துக்கு பாதாகாதிபதியின் நட்சத்திர சாரத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் என்று இருந்தால் வாழ்வில் வாறுமை நிலையே நீடிக்கும். இவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.
 
கேதுவுடன் நான்கு கிரகங்கள் சேர்ந்து ராகுவுடன் மூன்று கிரகங்கள் செர்ந்து இருந்தாலும் வாழ்வில் கஷ்டம் தவிர, சுகம் அனுபவிக்க முடியாத நிலையே  உருவாகும். இவர்களுக்கும் ஜாதகம் சொன்னால் பலிதம் ஆகாது.