வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. யோகா
  3. ஆசன‌ங்க‌ள்
Written By

லிங்க முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள்...!

இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக இறுக்கமாகக் கோர்த்து, இடது பெருவிரலை மட்டும் நேராக நிமிர்த்தி வைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் இரண்டு உள்ளங்கஈகளும் அசுத்தமாக இணைந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே லிங்க முத்திரையாகும். இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.
லிங்கம், வெப்பத்தின் வடிவமாகக் கருதப்படுகிறது. இது, வெப்பம் மற்றும் உயிர்சக்தியைத் தன்னிடத்தில் உள்ளடக்கி, நோய் க்கிருமிகள், உடலில் தேங்கி உள்ள கழிவுகளை அகற்றவல்லது. பல மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வியர்த்தல் உள்ளிட்ட பலனை சில நிமிடங்களில் இந்த முத்திரை  தந்துவிடும்.
 
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடல் எடை அதிகமாக இருப்பின் குறைந்து சரியான அளவில் இருக்கும். மேலும் இந்த முத்திரை ஜலதோசத்திற்கு நிவாரணம் தரும்.
 
பெண்கள்: வலது கை மேற்புறமாக இருக்குமாறு கோத்து, இடது கை கட்டைவிரலை உயர்த்த வேண்டும்.
 
ஆண்கள்: இடது கை மேல்புறமாக இருக்குமாறு கோத்து, வலது கட்டை விரலை உயர்த்த வேண்டும்.
 
வயிறு சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யகூடாது என்றும் கூறப்படுகிறது. ஒரேயடியாக நீண்ட நேரத்திற்குச் செய்ய ஆரம்பிக்காமல்  சுமார் ஐந்து நிமிட காலம் செய்வதில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. பின் சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள். இந்த முத்திரையால வியக்கத்தக்க பெரும்பலன்கள் கிடைக்கின்றன.