இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா துத்தி இலை !!
துத்திக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைய அளவில் உள்ளன. இக்கீரையை பச்சரிசி அல்லது துவரம் பருப்புடன் சமைத்து சாப்பிட்டால் வாய்வுக் கோளாறு கட்டுப்படும். மலத்தை இளக்கும்.
எலும்பில் முறிவு ஏற்பட்டவுடன் எலும்புகளைச் சரியாக இணைத்து வைத்து, முறிவு ஏற்பட்ட இடத்தில் துத்திக் கீரையை அரைத்துக் கனமாகப் பூசி இதன் மேல் துணியால் கட்டி, பிறகு இதை அசையாமல் மூங்கில் சிம்புகளை முறையாக வைத்துக் கட்டி அசையாமல் வைத்திருந்தால், சில தினங்களில் உடைந்த எலும்பு கூடிவிடும்.
சமையலுக்குப் பயன்படும் கீரைகளில் ஒன்றாக துத்திக் கீரை திகழ்கிறது. இந்தக் கீரையை பருப்பு சேர்த்து கடைந்தும், பொரியலாகவும் பயன்படுத்தலாம். குடல் புழுக்கம், குடல் புண், நீர்ச்சுருக்கு, சொறி சிரங்கு, காமாலை போன்ற நோய்களை குணப்படுத்துவதிலும் துத்திக்கீரை முக்கியப் பங்கு வகிக்கிறது.
துத்தி இலையை அரைத்து அதை கோடை காலத்தில் ஏற்படும் வேனற் கட்டிகம் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடைந்து அதனுள் இருக்கும் சீழ் வெளியேறும். அதேபோல் இக்கீரையிலிருந்து தயாரிக்கப்பட்ட பொடித் துகளும் தோல் தொடர்பான நோய்களைக் போக்கும்.
துத்தி இலையை கசாயம் செய்து கொப்பளித்தால் பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் நோய்கள் குணமடையும். அதேபோல் அந்தக் கசாயத்துடன் பாலும் சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், ஆசனக் கடுப்பு, மேகச் சூடு போன்றவையும் குணமாகும்.
வாயு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் இடுப்புவலி, பழைய மலத்தினால் உண்டாகும் பூச்சிகள் ஒழிய இந்தக் கீரையை அடிக்கடி கடைந்தோ, பொரியல் செய்தோ உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் யாவும் குணமடையும்.
Edited by Sasikala